நாகம்பட்டி மனோ கல்லூரி முன்னாள் மாணவ – மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி

நாகம்பட்டி மனோ கல்லூரி முன்னாள் மாணவ – மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகேயுள்ள நாகம்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழத்திற்குட்பட்ட மனோ கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 2003 -2006ம் ஆண்டு இளங்கலை வணிக நிர்வாகம் (பி.பி.ஏ) படித்தன முன்னாள் மாணவ- மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி மனோ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் சேர்மக்கனி தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் தளவாய்சாமி வரவேற்புரையாற்றினார்.

பேராசிரியர் தெய்வநாயகம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக எஸ்.பி.ஐ. வங்கி துணை மேலாளர் முத்துவைரம் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பேராசிரியர்கள் முருகன், சம்பத்குமார், முனைவர் கீதா, சுபாஷினி, முனைவர் சிவக்குமார், ஈஸ்வரன், யசோதா, முனைவர் வைஜோலதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் 2003 -2006ம் ஆண்டு இளங்கலை வணிக நிர்வாகம் (பி.பி.ஏ) படித்தன முன்னாள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது கல்லூரி கால நினைவுகளை நண்பர்களுடனும், தங்களது குடும்பத்தினருடம் பகிர்ந்து கொண்டனர்.

இறுதியில் சென்னை குருநானக் கல்லூரி உதவி பேராசிரியர் சுப்புராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவிகள் வெங்கடலட்சுமி, கார்த்திகா ஆகியோர் தொகுத்து வழங்கினார். இதற்கான ஒருங்கிணைப்பினை முன்னாள் மாணவர்கள் தளவாய்சாமி, ரமேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.