by: vtv24x7Posted on: April 19, 2016 தி.மு.க. ஆட்சியில் மாதம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கலாம்:திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதி திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் அருகே திறந்த வேனில் நின்ற படி மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 4.15 மணி அளவில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:-திருச்சி என்றாலே திருப்புமுனை தான். வருகிற சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையை உருவாக்கி தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தலைவர் கருணாநிதி மீண்டும் 6-வது முறையாக முதல்-அமைச்சராவது உறுதி. கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 501 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மாணவர்கள் கல்விக்காக வாங்கிய கடன் ரத்து செய்யப்படும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும்.திருச்சி மாநகரில் ஆட்டோ நகர் அமைக்கப்படும். சென்னையை போல புறநகரங்கள் உருவாக்கப்படும். திருச்சியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக கிடைப்பதில்லை. பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஒரு வாரம் அலைந்தும் கிடைப்பதில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ரேஷன் கடைகளில் மாதம் முழுவதும் பொதுமக்கள் பொருட்கள் வாங்கலாம். எந்த பொருட்களும் இல்லை என்று இல்லாமல் கிடைக்கும் வகையில் வழி செய்யப்படும். தி.மு.க. ஆட்சியில் திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டும் அதனை இந்த ஆட்சியில் நிறைவேற்றவில்லை. பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தென்னூரில் பூங்கா அமைக்கப்படும். காசிவிளங்கி பாலம் முதல் குடமுருட்டி பாலம் வரை வெள்ளதடுப்பு சுவர் கட்டப்படும்.இவ்வாறு அவர் பேசினார். Share this: Click to share on X (Opens in new window) X Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn Click to share on Pinterest (Opens in new window) Pinterest Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp