திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கேபிபி சாமியை ஆதரித்துஅன்பழகன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 திருவொற்றியூர் பெரியார்நகரில் திருவொற்றியூர்  தொகுதி திமுக சட்டமன்ற   வேட்பாளர் முன்னாள் அமைச்சர்  கே.பி.பி. சாமியை ஆதரித்து திமுக பொதுசெயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது அவர் கூறுகையில்  ஊழல்மிக்க மக்கள் விரோத அரசாக தமிழக அரசு திகழ்கிறது என்றும் இந்த ஆட்சியில் பால் அரிசி பருப்பு  உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்றும் விலைவாசி உயர்வுக்கு காரணமான மக்கள் விரோத  அதிமுகவை.ஒழித்து நல்லாட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும் எனதிருவொற்றியூர் தொகுதி  சட்டமன்ற   வேட்பாளர் முன்னாள் அமைச்சர்  கேபிபி சாமியை ஆதரித்து    நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக பொதுசெயலாளர்  பேராசிரியர் அன்பழகன் பேசினார்அதிமுக  ஆட்சி ஒழிந்தால்  ஒழிய தமிழர்களுக்கு மறுவாழ்வு ஏற்படாது தமிழர்களுக்கு மறுவாழ்வு தர ஒரு புதிய ஆட்சியை உருவாக்குவோம் என தெரிவித்தார் இப்பொதுக்கூட்டத்தில் திமுகவும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர்