சோட்டா ராஜன் மீது மேலும் 2 வழக்கு பதிவு செய்யப்பட்டது சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

inst-Chhota-Rajan-under-stringent-MCOCA_SECVPFதாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளியும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவருமான சோட்டாராஜனை மராட்டிய போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 25-ந் தேதி போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ததாக, இந்தோனேசியாவில் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்தியா கொண்டு வரப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இதற்கிடையே கடந்த 2013-ம் ஆண்டு மராட்டியத்தில் அஜஸ் கோசலியா என்ற கட்டிட நிபுணரை சோட்டா ராஜனின் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதேபோல், நிலேஷ் என்பவரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர்.இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக சோட்டா ராஜன் மீது சி.பி.ஐ. தற்போது வழக்கு பதிவு செய்து உள்ளது. இதனை சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் ஆர்.கே.கவுர் உறுதிபடுத்தி உள்ளார்.