“சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்காதீர்” – அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
பதிவு : ஆகஸ்ட் 17, 2020, 02:18 PM
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாளை முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், தமது டுவிட்டர் பதிவில் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பரவியதில், டாஸ்மாக் கடைகளுக்கு பெரும்பங்கு உண்டு என தெரிந்தும் சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது பெரும் தவறு என அதில் சுட்டிக் காட்டி உள்ளார். ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம் என்றும், வைரசை மேலும் பெருக்கிட கூடாது எனவும், அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.