சீன வாழ் இந்தியர்களுடன் அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசினார்

Manohar Parrikar Inaugurates Information Management And Analysis Centre5-நாள் சுற்றுப்பயணமாக சீனாவுக்கு சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று சாங்காய் தூதரகத்தில் சீன வாழ் இந்தியர்கனை சந்தித்து உரையாடினார். அப்போது, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதில் இந்திய அரசு திட்டவட்டமாக செயல்பட்டு வருவதாகவும், மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக வெற்றிகரமாக பல்வேறு நாடுகளில் இருந்து முதலீடுகரள ஈர்த்து வருவதாகவும் தெரிவித்தார். ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியா யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் உள்ளதா? என்ற கேள்வி தொடங்கி கல்வி நிலை வரை பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் மனோகர் பாரிக்கர்.
பிறகு, இந்தியர்களுடனான உரையாடலை முடித்துக் கொண்டு ஷாங்காய் நகரத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பீஜிங் சென்றடைந்தார். அங்கு, சீன பாதுகாப்பு மந்திரி ஜெனரல் சாங் வான்ஹான், சென்ட்ரல் மிலிட்டரி கமிஷன் துணை தலைவர் ஆகியோரை சந்தித்து இருநாடுகளின் பாதுகாப்பு குறித்து உயர் மட்ட பேச்சுவார்த்தையை நடத்த உள்ளார்.