சீனியர் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி

காட்பாடியில் உள்ள ஒலிம்பியா ஜிம் நடத்தும் சீனியர்  மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி நடைப்பெற்றது. போட்டியினை தொழிலதிபர் மற்றும் வேலூர் மாவட்ட ஆமெச்சூர் ஆணழகன் சங்க தலைவர் சேகர் ரெட்டி தொடங்கிவைத்தார். இதில் மாநில முழுவதிலுமிருந்து  பலர் கலந்து  கொண்டனர். இதில்  55, 65, 70, 90, கிலோ பிரிவுகளில் போட்டி நடைப்பெற்றாது. வேலூர் மாவட்டம் திருப்பத்துரைச் சேர்ந்த பிரதாப் என்ற வாலிபர் சீனியர் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் பட்டம் வென்றார். வெற்றி பெற்றவருக்கு  ரொக்க  பரிசும், இரு சக்கர வாகனம் அளிக்கப்பட்டது.