தமிழக பொறுப்பு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என்று அதிமுக பொதுசெயலளர் சசிகலா மீது குற்றச்சாட்டினார்.மேலும் ராஜினாமாவை திரும்பப்பெற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக வாபஸ் பெறுவேன் என்றும் தெரிவித்தார்.இதுகுறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் ஆவடி குமார் கூறும்போது, “முதல்வர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்ட பிறகுதான் அவரது குரல் வெளியே வந்துள்ளது. அதுவும் ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடி மற்றும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வழங்கிய பிறகு.அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார். பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகளும் மூலம் கட்சிக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. மாறாக ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் விளைவைத்தான் சந்தித்தது.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கை, குழம்பிய குட்டையில் பாஜகவும், மத்திய அரசும் மீன் பிடிக்க முயல்வதை காட்டுக்கிறது” என்றார்.