கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நடநராஜன், மாவட்ட செயலாளர் துரை, மாநில அமைப்பாளர் காளிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாடாளுமன்றத்தில் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை செய்த விவசாய உற்பத்தி பொருட்களுக்கு 50 சதவீத விலை உயர்வு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். விவசாய கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 14ம் தேதி கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு சர்க்கஸ் மைதானத்தில் தென் மண்டல விவசாயிகள் மாநாடு நடத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் விவசாயிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கபட உள்ளதெனவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். கூட்டத்தில், அவை தலைவர் வெங்கடசாமி, மாவட்ட பிரதிநிதி சீனிராஜ் உட்பட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.