கணவர் துணையில்லாமல் எதையும் சாதிக்க முடியாது – லதா ரஜினிகாந்த் பேட்டி

ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த், கடந்த ஆண்டு ‘பாரத் சேவா’ என்ற அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

இதில் லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டு பாரத் சேவா பாரத் மார்க்கெட் மற்றும் விற்பனை அங்காடிகளையும், மக்கள் மேடை திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒரு வீட்டில் கணவருடைய சப்போர்ட் இல்லாமல் ஒரு பெண் எதையுமே செய்ய முடியாது. அதற்கு முதலில் என் கணவர் ரஜினிக்கு தலை வணங்கி நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய முயற்சிகளை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார்.