ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை

jimnasticஇந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான தீபா கர்மகர் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டியில் அவர் 52.698 புள்ளிகள் பெற்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் 52 வருடங்களுக்குப் பிறகு ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய ஒலிம்பிக் வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார். சுதந்தரத்துக்குப் பிறகு 11 இந்திய ஆடவர்கள் ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துகொண்டுள்ளார்கள். முதல்முறையாக ஓர் இந்தியப் பெண் இப்போது தகுதி பெற்றுள்ளார்