இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத், சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.
38 வயதான ஹெராத் 71 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 74 விக்கெட்டுகளும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 17 ஆட்டங்களில் விளையாடி 18 விக்கெட்டுகளும், 67 டெஸ்டில் 297 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.