அறக்கட்டளை ஒன்றை அமைத்து பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை அவ்வப்போது செய்து வருவது நடிகர் விஷாலின் வழக்கம்.இயல்பாகவே உதவும் குணம் கொண்ட விஷால் தன் பிறந்த நாளின்போது ஏராளமான நலத்திட்ட உதவிகளைச் செய்வார். இந்த வருடமும் தனது பிறந்தநாளை முன்னிட்டுபொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கி மிக எளிமையான முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார் விஷால். மேலும் விஷால் ரசிகர்கள் பல ஊர்களிலும் ரத்த தானம் வழங்கி விஷால் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.