‘குப்பத்து ராஜா’ என்கிற படத்தில் தீவிரமான எம்.ஜி.ஆர். ரசிகராக நடிகர் பார்த்திபன் நடிக்கிறார். பார்த்திபன் இப்போதெல்லாம் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் வயதுக்கேற்றபடி கிடைக்கும் வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொள்கிறார். மாவீரன் கிட்டு படத்தில் கிராமத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் புரட்சியாளனாக நடித்து எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதேபோல, சமீபத்தில் வந்த பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் ஊர் பெரிய மனிதனாக வந்து உதயநிதியோடு மோதும் கதாப்பாத்திரத்தில் நடித்து நல்ல பெயர் எடுத்தார். தற்போது பார்த்திபன் ,’குப்பத்து ராஜா’ என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படம், குப்பத்து மக்களின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாக சொல்கிறது.
இதில், குடிசைப்பகுதியை சேர்ந்த தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகராக நடிகிறார் பார்த்திபன். இப்படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்குகிறார். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகராக நடிக்கும் பார்த்திபன், நிறையப் புத்தகங்களைப் படித்து, அவரைப் பற்றி ஏராளமான விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டாராம்.