திமுக சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து கடந்த 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவால யத்தில் நேர்காணல் நடத்தப்பட் டது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேர் காணல் நடத்தினர். முதன்மைச் செயலாளர் துரைமுருகன், சென்னை வடக்கு மாவட்டச் செய லாளர் மாதவரம் சுதர்சனம் ஆகி யோர் அப்போது உடனிருந்தனர்.கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகரில் ஜெய லலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன், ராயபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மதி வாணன், காமராஜரின் உறவினர் மயூரி உள்ளிட்ட 17 பேர் நேர் காணலில் பங்கேற்றனர். தேர்தலில் வெற்றி பெற என்னென்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? ஆளுங்கட்சி யான அதிமுகவை எதிர்கொள்ள முடியுமா? எவ்வளவு செலவு செய்ய முடியும்? தொகுதியில் எந்த அளவுக்கு உங்களுக்கு செல் வாக்கு உள்ளது? என பல்வேறு கேள்விகள் நேர்காணலின்போது கேட்கப்பட்டன.நேர்காணல் முடிந்ததும் நிருபர் களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘ஆர்.கே. நகரில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் முடிந்துள்ளது. வேட்பாளர் யார் என்பதை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆலோசித்து நாளை (இன்று) அறிவிக்கப்படும். ஆர்.கே.நகரில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக சார்பில் யார் போட்டியிட் டாலும் வெற்றி உறுதி. அதிமுகவின் மூன்று பிரிவுகள் போட்டியிட்டா லும், டிடிவி தினகரன் போட்டியிட் டாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஊடகங்கள் வெளிப்படுத் தாத மக்கள் பிரச்சினைகளை தேர்தல் பிரச்சாரத்தில் எடுத்து வைப்போம்’’ என்றார்.கடந்த தேர்தலில் ஜெய லலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2 மாதங்களாக தொகுதியில் கட்சித் தொண்டர்கள், பொதுமக் களை அவர் சந்தித்து வருகிறார். எனவே, அவருக்கே அதிகம் வாய்ப்பிருப்பதாக திமுக வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.