அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்நிலையில் சசிகலா அணிக்கு யார் தலைமை வகிப்பது என்ற கேள்வி எழுந்தது. சசிகலா தலைமையில் கூவத்தூரில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட கடிதம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.