அகிலேஷ்யாதவ் தான் சிறந்த முதல்-மந்திரி: தந்தை முலாயம்சிங் யாதவ் புகழாரம்

AKILESHசமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவிடம், 2017 தேர்தலில் அகிலேஷின் சகோதரர் சிவ்பால் யாதவை உத்தரபிரதேச முதல்-மந்திரி வேட்பாளராகவும், மாநில தலைவராகவும் முன்னிலைப்படுத்தும் திட்டம் உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டபோது- அகிலேஷ் தான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முதல்-மந்திரி. ஏழைகள், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், உத்தரபிரதேச மாநில வளர்ச்சிக்கும் அவர் மிகப்பெரிய பணிகளை ஆற்றியுள்ளார். அடுத்த சட்டசபை தேர்தலையும் அவரது தலைமையின் கீழ் தான் சந்திப்போம். அவர் ஆற்றியுள்ள வளர்ச்சிப் பணிகள் மாநிலம் முழுவதும் கண்கூடாக தெரிகிறதுஎன்றார். டெல்லி அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றாலும், மாநில அரசு அதன் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது. நாங்கள் செய்துள்ள பணிகள் காரணமாக மீண்டும் மாநிலத்தில் நாங்களே ஆட்சி அமைப்போம்.

இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.