டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச்ச முடிவு செய்தார். ஐ.பி.எல். தொடரில் முதல் முறையாக விளையாடிய மார்ட்டின் கப்தில், புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பார்த்திவ் பட்டேல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து அம்பதி ராயுடு, கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டார். ஆனால் 5 ரன்கள் எடுத்திருந்த போது ரோகித் சர்மா ரன் அவுட் ஆனார். இதன் பிறகு களமிறங்கிய ஜோஸ் பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து குணால் பாண்டியா களமிறங்கினார். தவான் கேட்ச்சை விட்டதால் தப்பிப் பிழைத்த குணால் பாண்டியா அதே ஓவரில் 3 சிக்ஸ் அடித்து மும்பை அணிக்கு உற்சாகத்தை தந்தார். சிறப்பாக ஆடிய அம்பதி ராயுடு 49 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து சரண் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இறுதி கட்ட ஓவர்களில் ஐதராபாத் அணி அதிக ரன்களை விட்டுக் கொடுக்காததால், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. குணால் பாண்டியா 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் தரப்பில் பாரிந்தர் சரண் 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. ஷிகர் தவான் (2), ஹென்ரிக்ஸ் (20), மார்கன் (11) ஏமாற்றினர். அரைசதம் கடந்த வார்னர், சிக்சர்களாக விளாச, ஐதராபாத் அணி 17.3 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 145 ரன் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. வார்னர்(90), ஹூடா(17) கடைசி அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் கேப்டன் டெவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.