மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் ரூ. 17க்கு தனியார் நிறுவனங்கள் வாங்கி அதை ரூ. 42 க்கு விற்பனை செய்கிறது. இந்த கொள்ளை லாபத்தை சுட்டிக்காட்டி ஒரு லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தி தருமாறு பால் உற்பத்தியாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.