மலை சாலையில் மண்சரிவை தடுக்கும் கூண்டு சுவர் – மலை ரயில் பாதையிலும் கூண்டு சுவர் அமைக்க கோரிக்கை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியே உதகை செல்லும் மலைச்சாலையில் ஏற்படும் மண் சரிவை தடுக்க நெடுஞ்சாலை ஆணையம் கூண்டு சுவர் அமைத்தது.கடந்த 2010ஆம் ஆண்டு சிமெண்ட் மணல் மற்றும் செங்கல் பயன்படுத்தி கட்டாமல் இரும்பு கம்பிகள், கருங்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்த சுவர் கட்டப்பட்டிருந்தது. அதன் பிறகு அந்த இடத்தில் மண் சரிவு ஏற்படாததால் மலை ரயில் பாதையிலும் கூண்டு சுவர்களை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.