பாட்டி சச்சு எந்த வித கவலையில்லாமல் ஜாலியாக இருந்து வருகிறார். அதே சமயம் தன் பேத்தி (ஷில்பா மஞ்சுநாத்) தோழியாகவும், பாசமாகவும் இருக்கிறார். பாட்டிகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொள்கிறார், வெற்றியடையாமல் தோற்று போகிறார்.
மேலும் வீட்டிலும் இவர் செய்யும் சில விஷயங்களால் மகன் லிவிங்ஸ்டன் திட்டி விடுகிறார். இதனால் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
இந்நிலையில் சரவணன் சுப்பையாவின் FACE & FAIR அழகு சாதன நிறுவனம் முதலிடத்தில் இருந்து சரிகிறது. இதனால் விஞ்ஞானி மூலம் புதிதாக சித்தர் கண்டுபிடிப்பு மற்றும் நவீன விஞ்ஞானம் கலந்து முதியவர்களை இளமையாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதற்கான முயற்சியில் யார் மீது செயல்படுத்தலாம் என தேடி கொண்டிருக்கும் போது சச்சுவை அவரது சம்மததுடன் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி வெற்றியடைகிறார்கள்.
இளமையாக மாறிய சச்சு (ஷில்பா மஞ்சுநாத்) மாடலிங்கில் ஒரு ரவுண்டு வருகிறார். இவரால் பேத்தியான ஷில்பா மஞ்சுநாத்துக்கு பிரச்னை ஏற்படுகிறது. இளமையாக மாறிய சச்சு என்னவெல்லாம் லூட்டி அடிக்கிறார்? இளமையான சச்சு மீண்டும் முதுமைக்கு திரும்பினாரா? ஆராய்ச்சியின் வளர்ச்சி ஆபத்தா? அழிவா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஷில்பா மஞ்சுநாத் இரட்டை வேடத்தில் ( பாட்டி – பேத்தி ) சிறப்பாக கதாபாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்துள்ளார். சச்சுவும் தன் அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
சிறிய முதலீட்டில் விஞ்ஞான படத்தை வழங்க முடியும் என நிருபித்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.
“பேரழகி ISO” அறிவியலின் வளர்ச்சியையும், ஆபத்தையும் விளக்கும் படம்