’கண்களால் கைது செய்’ என்ற படத்தின் மூலம் இயக்குனர் பாரதிராஜாவினால் தமிழ் படஉலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி. ‘அது ஒரு கனாக்காலம், தோட்டா, நினைத்தாலே இனிக்கும், மலைக்கோட்டை’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர்; அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் பிரியாமணிக்கும், தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெங்களூருவில் நிச்சயதார்த்தம் நடந்தது.மேலும் திருமணத்தை இருவரும் பதிவு செய்துகொள்கிறார்கள். மறுநாள் 24-ந்தேதி மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அதில் ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இரண்டு பேரின் பெற்றோர்களும் கவனித்து வருகிறார்கள்.