தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியாக கடந்த 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள வாகனக் கட்டுப்பாடு திட்ட விதியை மீறிய குற்றத்துக்காக பாஜக எம்.பி. விஜய் கோயலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ரெய்சினா சாலையில், வாகனக் கட்டுப்பாட்டு விதியை மீறியக் குற்றத்துக்காக எம்.பி. விஜய் கோயலின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, அபராதமாக ரூ.2000 விதிக்கப்பட்டது.மேலும் செய்யப்பட்ட சோதனையில், விஜய் கோயலிடம் ஓட்டுநர் உரிமமும், வாகனத்துக்கான காப்பீடும் இல்லாதது தெரிய வந்ததால், அதற்காக தனியாக ரூ.1,500க்கும் அபராதம் விதிக்கப்பட்டது.இது குறித்து கோயல் கூறுகையில், விதியை மீறியதாக எனக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமம், காப்பீடு இல்லாததற்கும் அபராதம் விதிக்கப்பட்டது. எனது ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்பீடுச் சான்றிதழ் கார் ஓட்டுநரிடம் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.