சென்னையில் நேற்று நடந்த ‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சியில் மாணவ–மாணவிகளின் கூட்டம் அலைமோதியது.கல்வியில் மாணவ–மாணவிகளை ஊக்கப்படுத்துவதற்காக ‘தினத்தந்தி’ நாளிதழில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாணவர் ஸ்பெஷல் என்ற பகுதியை இணைத்து வெளியிட்டு வருகிறது.எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகளில் மாணவ–மாணவிகள் அதிகளவில் மதிப்பெண் பெறுவதற்கு வசதியாக சிறந்த கல்வியாளர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வினா–விடை புத்தகத்தையும் தேர்வுக்கு முந்தைய காலகட்டங்களில் ‘தினத்தந்தி’ நாளிதழுடன் இலவசமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.பிளஸ்–2 மாணவ–மாணவிகள் மேற்படிப்பை தொடருவதற்கு என்ன படிக்கலாம்? எந்த படிப்பை தேர்ந்து எடுக்கலாம்? என்ற ஆலோசனைகளை வழங்குவதற்காக ‘வெற்றி நிச்சயம்’ என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியையும் தொடர்ந்து நடத்திவருகிறது.இதுபோன்று மாணவர் சமுதாயம் மீது அக்கறை கொண்டு பல்வேறு பணிகளை செய்து வரும் ‘தினத்தந்தி’ தற்போது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மற்றொரு அதன்படி, இந்த ஆண்டு ‘தினத்தந்தி’ மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் இணைந்து ‘கல்வி எக்ஸ்போ 2016’ கண்காட்சியை நேற்று நடத்தியது. இந்த கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. கண்காட்சியை டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.