கொரோனோ தொற்று காரணமாக 5 மாதங்களாக சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.
கொரோனோ தொற்று காரணமாக 5 மாதங்களாக சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் நாளை முதல் சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோன் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. இங்கு பலவகையான மதுபாட்டில்கள் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது. 5 மாதங்களாக கடைகள் மூடப்பட்டு இருந்ததால் காலாவதியான பீர் பாட்டில்கள் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், சென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு புதிய பீர் பாட்டில்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.