கோவில்பட்டி பொது நல மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
கோவில்பட்டி பொது நல மருத்துவமனை சார்பில் இலவச சிறப்பு மருத்துவமுகாம், மற்றும் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண்மருத்துவ முகாம், வள்ளுவர் நகரில் உள்ள மணிகண்டன் மேச் ஓர்க்ஸ்சில் நடைபெற்றது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு பொது நல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம் தலைமை வகித்தார், செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் மருத்துவமுகாமினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொது நல மருத்துவமனை நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் காமராஜ், ரமேஷ், நாடார் உறவின்முறை சங்க நிர்வாகி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள் முருகேசன், செல்வபிரியா ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இருதய பரிசோதனை, மகளிர்க்கான சிறப்பு மருத்துவம், கண் சம்பந்தப்பட்ட நோயகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இலவசமாக மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன.