கோவில்பட்டி நேதாஜீ ஹாக்கி கிளப் சார்பில் நிதியுதவி வழங்கும் விழா
கோவில்பட்டி ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளையின் 15 ஆண்டு கால சேவையினை பாராட்டி நேதாஜீ ஹாக்கி கிளப் சார்பில் 25000 ரூபாய் வழங்கப்பட்டது.
ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளையானது கோவிலபட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரத்ததானம்,கண்தானம், மரக்கன்றுகளை நட்டுப்பராமரித்தல் போன்ற பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்துவருகின்றது. ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளையானது தற்போது கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 5000 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அந்த மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி பராமரிக்கும்விதமாக தண்ணீர் டேங்கர் வண்டி வாங்குவதற்கு கோவில்பட்டி நேதாஜீ ஹாக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 25000 ரூபாய் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஜீவஅனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நேதாஜீ ஹாக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சுடலை முத்து ஆகியோர் 25000 ரூபாய்க்கான காசோலையை அறக்கட்டளை நிறுவனர் இராஜேந்திரனிடம் வழங்கினர். நேதாஜீ ஹாக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் துணை தலைவர் நீதிதேவன், பன்னீர்செல்வம்,முருகேஸன்,நோபில்ராஜ் ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளை நிர்வாகிகள் சண்முகலட்சுமி, பாபு,மகேஸ் , சந்திரசேகர், பாலசுப்பிரமணியன்,நந்தினி, மற்றும் பேராச்சி பாலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.