கடந்த 2014ம் ஆண்டு கள்ளக்காதலுக்காக பெற்ற மகள் மற்றும் மாமியாரை கொலை செய்து, கணவரை கொல்ல முயன்ற வழக்கில், காதலனுக்கு தூக்கு தண்டனையும், பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.மென்பொருள் பொறியாளர்களான நினோ மேத்யூ மற்றும் அனு ஷாந்தி ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையில், குழந்தையை இழந்த அனு ஷாந்தியின் கணவர் லிஜேஷுக்கு ரூ.50 லட்சமும், மனைவியை (லிஜேஷின் தாய்)இழந்த தங்கப்பன் செட்டியாருக்கு ரூ.30 லட்சமும் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. இரட்டைக் கொலை வழக்கு விசாரணை முடிவடைந்து, கடந்த வாரம், தீர்ப்பளித்த நீதிபதி, ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த மென்பொருள் பொறியாளர்கள் அனு ஷாந்தி – நினோ மேத்யூ இருவருமே குற்றவாளிகள் என்று கூறினார்.இந்த நிலையில் இன்று இருவருக்குமான தண்டனை விவரங்களை வெளியிட்ட நீதிபதி, ‘அரிதிலும் அரிதான வழக்கு’ இது. ‘கடுமையான’, ‘கொடூரமான’ குற்றமாக இது எடுத்துக் கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டார்.மேலும், இரட்டைக் கொலையிலும் அனு ஷாந்தி முழுதாக ஈடுபட்டுள்ளார். அவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் ஒரு பெண் என்பதால் வழங்கப்படவில்லை என்று நீதிபதி கூறியுள்ளார்.