கிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது கடினம் என்கிறார் தெண்டுல்கர்

tendulkarஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. பகல் 1 மணிக்கு தெண்டுல்கர் தனது பேஸ்புக்கில் இந்த டீசரை வெளியிட்டார். இந்த நிலையில் மும்பையில் நேற்று நடந்த விழாவில் கலந்து கொண்ட தெண்டுல்கர் பேசுகையில், ‘பல வருடங்களாக நான் என்ன நினைத்தேனோ? அதனை செய்தேன் அதனை கேமிராக்கள் உள்வாங்கின. தற்போது திடீரென என்னை குறிப்பிட்ட செயலை செய்ய சொல்லி அதனை கேமிராவில் படம் பிடிக்கிறார்கள். இது எனக்கு முற்றிலும் வித்தியாசமானது. கிரிக்கெட் ஆடுவதை விட நடிப்பது மிகவும் கடினம் என்பதில் சந்தேகம் இல்லை’ என்று தெரிவித்தார்.மான்டிகார்லோ டென்னிஸ்: கால் இறுதியில் ஆன்டி முர்ரே, ரோகன் போபண்ணா ஜோடி மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. ஆன்டி முர்ரே, ரோகன் போபண்ணா ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-புளோரின் மெர்கா (ருமேனியா) ஜோடி 7-5, 7-5 என்ற நேர்செட்டில் ராபர்ட் லின்ஸ்டெட் (சுவீடன்)-அலெக்சாண்டர் பெயா (ஆஸ்திரியா) இணையை தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 2-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் பினோய்ட் பைரை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்று ஆட்டத்தில் 4-6, 6-2, 4-6 என்ற செட் கணக்கில் 55-வது நிலை வீரரான செக் குடியரசின் ஜிரி வெஸ்லியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். 3 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது சுற்றில் ஜோகோவிச் தோல்வியை சந்தித்தது இதுவே முதல்முறையாகும்.