வேலூர் சார்பனாமேடு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டிய போது பக்கத்தில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலி – தீயனைப்புத்துறையினர் உடலை மீட்டனர்
வேலூர்மாவட்டம்,சார்பனாமேடு பகுதி நாராயணன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பக்கத்தில் புதியதாக கட்டிடம் கட்டுவதற்காக கட்டிட தொழிலாளியான கீழ்முட்டுக்கூரை சேர்ந்த ஆறுமுகம் (50) பள்ளம் தோண்டிகொண்டிருந்தார். அப்போது பக்கத்தில் உள்ள நாராயணன் என்பவரின் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. அதிலிருந்து தப்பிக்க கட்டிட தொழிலாளி ஆறுமுகம் குதித்த போது அவர் தோண்டிய பள்ளத்திலேயே விழுந்து மண் சுவர் பள்ளம் முழுவதையும் மூடியதில் பள்ளத்தில் ஆறுமுகம் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து வேலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் போராடி ஆறுமுகத்தை மீட்டனர். ஆனால் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தெற்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ஆறுமுகத்தின் உடலை பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிட தொழிலாளி சுவர் இடிந்து பள்ளத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.