ஓகி புயலில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

தூத்துக்குடியை சேர்ந்த தொபியாஸ் என்பவரது மகன் கெனிஸ்டன், இவர் கேரளா மாநிலத்திற்கு மீன்பிடிக்க சென்ற போது, 30.11.2017 அன்று, ஏற்பட்ட ஒகி புயல் காரணமாக மரணமடைந்துள்ளார். கெனிஸ்டன் உடல் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டி.என்.ஏ., பரிசோதனை செய்யப்பட்டு 3.1.2018 அன்று அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவிப்பின்படி, ஒகி புயலால் மரணமடைந்த, மீனவர் கெனிஸ்டன் மனைவி ஜெயந்தி மற்றும் லிபின் ஆகியோருக்கு, மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், ரூ.20 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன் உடனிருந்தார்.