உலகிலேயே மிகப்பெரிய ‘ராட்டை’; டெல்லி விமான நிலையத்தில் நிறுவப்படுகிறது

Gandhi and His Spinning Wheel: the Story Behind an Iconic Photoஉலகிலேயே மிகப்பெரிய மரத்தாலான ‘ராட்டை’ டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 3-வது டெர்மினலில் நிறுவப்பட உள்ளது. அகமதாபாத்தில் உள்ள காதி கிராம பவனில் இருந்து இந்த ராட்டை டெல்லிக்கு அனுப்ப தயாராக உள்ளது. உயர்ரக தேக்கு மரத்தால் 4 டன் எடையில் இந்த பிரம்மாண்ட ராட்டை உருவாக்கப்பட்டுள்ளது. 26 மர வேலைப்பாடு தொழிலாளர்களின் உழைப்பில் 40 நாட்களுக்கும் மேலாக உருவான இந்த ராட்டை 50 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து உழைக்கக் கூடியதாகும். இந்தியாவின் அகிம்சைக்கான குறியீடாக உலக நாடுகள் அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த பிரம்மாண்ட ராட்டை டெல்லி விமான நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு டெல்லி விமான நிலையத்தில் 2,50,000 பயணிகள் வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.