நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15 முதல் ஜனவரி 5 வரை

0

டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் பரிந்துரையை குடியரசு தலைவர் ஏற்றவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முத்தலாக் உள்ளிட்ட மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளன. மேலும் பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொலை, மதக்கலவரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

Spread the love

Comments are closed.