விஜய் மக்கள் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து  கொண்டாடும் மெர்சல்

விஜய் மக்கள் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடும் மெர்சல்

அட்லி இயக்கத்தில் விஜய், நித்யாமேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, கோவை சரளா ஆகியோரின் நடிப்பில் உருவான மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி பல சர்சைக்களை சந்தித்து, வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்தப்படம் வெளியான ஒரே வாரத்தில் பிளாக் பஸ்டர் மூவி லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. மேலும், இப்படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மெர்சல் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மெர்சல் அந்த இலக்கைத் தொட்டால், ரூ.200 கோடியைத் தொட்ட முதல் விஜய் படம் என்கிற பெருமையும் மெர்சல் படத்துக்கு கிடைக்கும். இந்நிலையில், படம் வெளிவந்து பத்து நாட்களே ஆன நிலையில், மெர்சல் படத்தின் வெற்றி விழாவை கோலாகலமாகக் கொண்டாட விஜய் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக,

நெல்லை ராம் முத்துராம் சினிமாஸ் தியேட்டரில் நாளை மறுநாள், அதாவது; அக்டோபர் 29 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு மெர்சல் படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்ய்யப்படுள்ளது. 
இந்த விழாவை விஜய் மக்கள் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து நடத்துகின்றன. இதை முதல் நாள், முதல் காட்சி போல கொண்டாடுங்கள், முன் பதிவு இன்று ஆரம்பம் என அவர்கள் அறிவித்துள்ளனர்.