வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

ஆடியோ கடை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார் நாயகன் விக்ராந்த். விக்ராந்தின் தந்தையாக பசுபதி, அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் கபடி மீது கொள்ளை பிரியமாக இருக்கிறார் பசுபதி. இதனால் அரசுப் பணியும் பறிபோகிறது. பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண்ணான கதாநாயக அர்த்தனா பினு மீது காதல் ஏற்படுகிறது. மகளின் காதல் தந்தையான ரவி மரியாவுக்கு தெரியவர விக்ராந்தை கொள்ள ஆள் அனுப்புகிறார். விக்ராந்தை கொள்ள  வருபவர்களை பசுபதி அடித்து விரட்டுகிறார்.

அதுவரை தந்தையை பிடிக்காமல் இருந்த விக்ராந்துக்கு பசுபதி மீது மரியாதை ஏற்படுகிறது. அம்மாவின் மூலம் தந்தை  முன்னாள் கபடி வீரர் என்று தெரிந்து கொண்டு தானும் கபடியில் சிறந்த வீரனாக ஆகவேண்டும் என்று தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து. சென்னைக்கு செல்வதாக சொல்லிவிட்டு தந்தையின் சொந்த ஊருக்கு செல்கிறார் விக்ராந்த்.

அந்த ஊரில் பிரிந்து இருக்கும் வெண்ணிலா கபடி குழுவினரை சந்தித்து ஒன்றாக இணைத்து அவர்களிடம் கபடி விளையாட கற்றுக் கொள்கிறார் நாயகன் விக்ராந்த். தந்தை வெற்றி பெற வேண்டும் என்று நினைத்த கபடி போட்டியில் விக்ராந்த் வெற்றி பெற்றாரா? காதலியான அர்த்தனா பினுவுடன் சேர்ந்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

விக்ராந்த் காதல், குடும்பம் என துரு துரு இளைஞனாகவும், கபடி விளையாட்டில் சிறந்த வீரராகவும் சிறப்பாக நடித்துள்ளார். அழகு பதுமையாக அழகாக வந்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார் அர்த்தனா பினு. சூரி, பசுபதி, ரவிமரியா என எல்லோரும் அவரவர் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர்.