“வெல்வோம்” குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறும்படம்

மதுரையில் கோரிப்பாளை பந்தில் அமைந்துள்ள அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் மதுரை மாநகர காவல்துறை சார்பாக “வெல்வோம்” என்ற குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது.

மதுரையைச் சுற்றிலும் நடக்கும் கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் தற்போது சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, வைரலாகியும் வருகிறது. நகை பறிப்பு , கொலை , பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல் ஆகிய குற்றங்களை உடனடியாக காவல்துறையிடம் எடுத்துச்செல்ல ‘காவலன் ‘ MADURAI CITY POLICE – SOS APP இல் தெரிவிக்கலாம் . தகவலை பெறப்பட்டவுடன் ஒரு சில நிமிடங்களில் காவல் துறையினர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வருவார்கள்.

மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் குறும்படத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சசிகுமார் நடிகர் சமுத்திரக்கனி மற்றும் மதுரை மாநகர் காவல் துறை துணை கமிஷனர் கார்த்திக் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு இந்த குறும்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு கேடயம் மற்றும் சான்றிகள் வழங்கினர் மற்றும் அமெரிக்கன் கல்லூரி மாணவ மாணவிகள் வெல்வோம் குறும்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.