வெள்ளை பூக்கள் விமர்சனம்

ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக விவேக் பணி ஓய்வுக்குப் பின் அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டிற்குச் செல்கிறார். அமெரிக்கப் பெண்ணை திருமணம் செய்ததால் மருமகளிடம் பேசாமல் இருக்கிறார்.

அக்கம்பக்கத்தில் சிலர் திடீரென்று கடத்தப்படுகின்றனர். அமெரிக்க போலீஸ் விசாரணை செய்து கொண்டிருக்க விவேக்கும் சும்மா இருக்காமல் சார்லியுடன் தனியாக விசாரணையைத் தொடங்குகிறார்.

இவ்வாறு துப்பறிந்து கொண்டிருக்கும் பொழுதே விவேக்கின் மகனும் கடத்தப்படுகிறார். கடத்தியது எதற்காக? கடத்தப்பட்டதற்கு காரணம் என்ன? கடத்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்? என்பதுதான் வெள்ளைப்பூக்கள் படத்தின் மீதிக்கதை.

துப்பறியும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் நடிகர் விவேக். மகனை நினைத்து உருகும் காட்சியில் அசத்தியுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சார்லி திரையில் தோன்றி ஸ்கோர் செய்கிறார்.

படத்தில் நிறைய முறை அமெரிக்க முகங்கள் இருந்தாலும் விவேக்கின் மருமகளாக வரும் பெய்ஜ் ஹெண்டர்சன் நன்றாக நடித்துள்ளார்.

பின்னணி தொழில் நுட்பக்குழுவினர், நடிகர் நடிகைகள் என எல்லோருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

வெள்ளைப் பூக்கள் படம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கும்