வேலம்மாள் பள்ளி ஆசிரியருக்குச் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது

வேலம்மாள் பள்ளி ஆசிரியருக்குச் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது

லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை ஆர்க்கிட் சமீபத்தில் ஏற்பாடு செய்த சர்வதேச அளவிலான லயன்ஸ் கிளப்பின் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் சிறந்த ஆசிரியருக்கான ராதாகிருஷ்ணன் விருதினை வேலம்மாள் வித்யாலயா பள்ளி ஆசிரியர் திரு .கே துர்காபிரசாத், அவர்களுக்கு வழங்கி கௌரவப்படுத்தியது.

திரு. கே. துர்காபிரசாத் கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக அங்கீகரிக்கப்பட்டு இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வேலம்மாள் நெக்ஸஸ் நிர்வாகம் அவரது முன்மாதிரியான சாதனை மற்றும் அர்ப்பணிப்பை முழு மனதுடன் பாராட்டுகிறது.