முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு இந்திய ஹஜ் அசோஷியேஷன் சார்பில் அஞ்சலி

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு இந்திய ஹஜ் அசோஷியேஷன் சார்பில் அஞ்சலி

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வேதனையுற்றேன். அண்மையில் எனது தாயார் அமெரிக்காவில் உயிரிழந்த போது முதலமைச்சர் என்னை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

இந்த நேரத்தில் நீண்ட நாட்கள் நண்பராக பழகி வரும் முதலமைச்சருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்கு முதலமைச்சராக இருந்தாலும் தாய்க்கு மகன் என்கிற போது அதன் வலியும் வேதனையும் அதிகம் என்பதை உணர்கிறேன். தாயாரின் ஆன்மா அமைதியின் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
பிரசிடெண்ட் அபுபக்கர், தலைவர், இந்திய ஹஜ் அசோஷியேஷன்