இன்றைய செய்திகள்

சென்னை ரயிலில் கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் சுற்றுவது குறித்த வீடியோ வெளியிட்ட 3 ஆம் ஆண்டு மாணவர் பாரதிராஜா சஸ்பெண்ட்.

இரட்டை இலை தொடர்பான இறுதி விசாரணை: வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவு.

நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் டெல்லி பயணம் – மைத்ரேயன் எம்பி , கேபி.முனுசாமி , மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் டெல்லி செல்கின்றனர்.

பரோல் நீட்டிப்பு கேட்கவில்லை நாளை மாலைக்குள் மீண்டும் சிறைக்கு செல்கிறார் சசிகலா.

தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் பத்தாயிரம் ரொக்கம் தீபாவளி பரிசாக வழங்கப்படும் – நடிகர் விஷால்.

சபாநாயகரை மிரட்டும் விதமாக டிடிவி.தினகரன் பேசி வருகிறார்.அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்ற விவகாரத்தில் ஜெயலலிதாவின் கொள்கையை பின்பற்றுவோம் – அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வில் எங்களுக்கு திருப்தியில்லை – தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம்.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு.

13ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பெட்ரோல் பம்ப் டீலர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

பிச்சை எடுத்த ரஷ்ய வாலிபருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் – சுஷ்மா ஸ்வராஜ்.

நாகேஷ் திரையரங்கு திரைப்பட இழப்பீடு வழக்கு தள்ளுபடி.

அண்ணாவின் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் சூழலில் பாஜகவினர் உள்ளனர் – முக. ஸ்டாலின்.

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு.

ஆசிய கோப்பை ஹாக்கி ஜப்பானுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி.

தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100இல் இருந்து 15,700 ஆக உயர்வு.7வது ஊதிய குழு பரிந்துரைகள் – 1.10.2017 தேதி முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும் – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு.

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வால் ஏற்படும் ரூ14,719 கோடி கூடுதல் செலவை அரசே ஏற்கும். தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வால் 7 லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் – முதலமைச்சர் பழனிசாமி.

10ஆம் வகுப்புக்கு டிச.11இல் தொடங்கி டிச.23இல் அரையாண்டுத் தேர்வு முடிவடைகிறது. 11,12 ஆம் வகுப்புக்கு டிச.7இல் தொடங்கி டிச.23இல் அரையாண்டுத் தேர்வு முடிவடைகிறது.