ஆர்வம் நிறைவேறும்

0

 சுற்றுலாவைத் தாண்டி சிங்கப்பூர் தொடர்பான பல விஷயங்களை எடுத்துரைக்கும். சிங்கப்பூர் மக்கள் மற்றும் வாழ்க்கை பற்றி விளக்கும். சிங்கப்பூர் கதைகளை சிங்கப்பூரர்களின் குரல் வழி அனைத்துலக மக்களும் அறிந்து கொள்வர். இந்தியர்கள் மத்தியில் சிங்கப்பூருக்கு பயணம் செய்ய அதிக ஆர்வம் உள்ளது. இதைக் கண்டு நாங்கள் பணிவுடன் மகிழ்ச்சி கொள்கிறோம்.

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 1,100,000 பேர் சிங்கப்பூருக்குப் பயணம் செய்துள்ளனர். தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த அடையாள பரப்புரை வழி, இந்தியாவில் உள்ள நண்பர்கள் மற்றும் சிங்கப்பூர் ஆர்வலர்கள் மத்தியில் மேலும் இந்த நல் உறவை ஆழமாக்கி வலுவாக்கும்.

ஆர்வம் நிறைவேறும்” என்பதை இந்திய மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. சிங்கப்பூர் பயணத்துறை வாரியமும் சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டு வாரியமும் இணைந்து சிங்கப்பூரில் அனைத்துலக சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை அதிகப்படுத்த புதிய திட்டம் மற்றும் பிரசாரத்தை முதல் முறையாக  அறிமுகப்படுத்தியுள்ளன.   சிங்கப்பூரின் தனித்துவமான நோக்கங்களையும் மன ஓட்டங்களையும் முன்னிலைப்படுத்த இரு நிறுவனங்களும் இணைந்து துணிச்சலான முயற்சியை முன்னெடுத்துள்ளன.சாத்தியங்களை ஆராய்தல், ஓய்வற்ற மன உறுதியுடன் புதியனவற்றைப் புனைதல், என நாட்டின் ஆர்வ உந்து ஆற்றலை இந்த பரப்புரை காட்டுகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக சிங்கப்பூர் வலுவான உலக சுற்றுலா மற்றும் வர்த்தக மையமாக தன்னை உருவாக்கி நற்பெயரைப் பெற்றுள்ளது. உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, நிலைத்தன்மை, பயன் மிக்க சமூக, தொழில் நிபுணத்துவ வர்த்தக உறவுகள், எளிதில் பெறக் கூடிய வசதிகள் போன்றவையே இதற்கு காரணம்.  எனினும் சுற்றுலா மற்றும் முதலீட்டை ஈர்ப்பதில் உலக அளவில் போட்டி அதிகரித்துள்ளது. பயணிப்பவர்கள் தங்கள் பயண இடத்தை தேர்வு செய்யும்போது அதிக கவனத்துடன் உள்ளனர். கலாசாரங்களில் தோய்ந்து தாங்கள் பயணிக்கும் நாடுகளுடன் ஆழமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள ஆர்வம் கொள்கின்றனர். அனைத்துலக வர்த்தக நிறுவனங்கள் ஏற்றவாறு புதிய நடைமுறைகளை எதிர்பார்க்கின்றன. தனித்துவம் வாய்ந்த மாற்றங்களை கொண்டு வரும் புதிய நடைமுறைகளை எதிர்பார்க்கின்றன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தனித்துவமான ஒருங்கிணைக்கப்பட்ட புதிய திட்டம் .

Spread the love

Comments are closed.