ஜூங்கா படத்தில் மேயாத மான் நாயகி

 
சின்னத்திரையில் கலக்கி வந்தவர் பிரியா பவானிஷங்கர். சமீபத்தில் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளி திரைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். தனது துறுதுறு நடிப்பால் இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட பிரியாவுக்கு வரிசையாக படங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. 
 மேயாத மான் படத்தை தொடர்ந்து பாண்டிய ராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள புது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மற்றொரு முன்னணி நடிகருடன் பிரியா ஜோடி சேர உள்ளார்.  விஜய் சேதுபதி நடிக்கும் ஜூங்கா படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் பிரியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அந்த படத்தில் ஷாயிஷா எனும் மற்றொரு கதாநாயகி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவரைப் போலவே இவருக்கும் இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்று காத்திருக்கிறதாம்.