சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை நடிகை சாய்பல்லவி

சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை நடிகை சாய்பல்லவி

‘பிரேமம்’ படத்தில் நடித்து தென் இந்திய பட உலகில் பிரபலம் ஆனவர் சாய்பல்லவி. முதல் படத்திலேயே ‘மலர் டீச்சர்’ என்று அவரை ரசிகர்களும் கொண்டாடினார்கள். இது போல தெலுங்கிலும் அறிமுகமான முதல் படத்திலேயே பானுமதி என்ற அவரது பாத்திரம் பேசப்பட்டது. அங்கும் ரசிகர்களுக்கு பிடித்த நடிகை ஆனார். தமிழில் பிரபல நடிகர்களுடனும், பிரபல இயக்குனர்கள் படங்களிலும் நடிக்க சாய் பல்லவிக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் டாக்டருக்கு படிக்கப்போவதாக சொல்லி அதை தவிர்த்து விட்டார்.

இப்போது தமிழில் விஜய் இயக்கத்தில் ‘கரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் தயாராகிவிட்டார்.இந்த நிலையில் சாய்பல்லவி அளித்த பேட்டியில், “நான் கல்லூரி நாட்களில் இருந்தே சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. அவருடைய படங்களை தவறாமல் பார்ப்பேன். எந்த நேரத்திலும் சூர்யாவுடன் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு பிடித்த நடிகை அனுஷ்கா” என்று தெரிவித்துள்ளார்.