புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தம்புதிய உடல்நலக் காப்பீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்துகிறது ஸ்டார் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ்

இந்த புதிய உடல்நலக் காப்பீடு திட்டமானது, வழக்கமான மருத்துவக் காப்பீட்டை போல் இல்லாமல் புற்றுநோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் இருத்தல், புற்றுநோய் பரவுதல் மற்றும் இரண்டாவது புற்று உருவாதல்  ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

சென்னை, 24 அக்டோபர் 2017 – ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லய்ட் இன்ஸ்சூரன்ஸ், இந்தியாவில் ஹெல்த்  இன்ஸ்சூரன்ஸிற்காக ப்ரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட முதல் நிறுவனமாக முன்னணியில் இருக்கும் இந்நிறுவனம் இன்று ‘ஸ்டார் கேன்சர் கேர் கோல்ட்’ (Star Cancer Care Gold) என்னும் புதிய உடல்நலக் காப்பீட்டை அறிமுகம் செய்திருக்கிறது. புற்றுநோய் இருப்பதாக ஏற்கனவே கண்டறியப்பட்டவர்களுக்கென முதல் முறையாக  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் உடல்நலக் காப்பீடு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஸ்டார் கேன்சர் கேர் கோல்ட்’ காப்பீடு 5 மாதங்கள் முதல் 65 ஆண்டுகள் வயதுள்ளவர்களுக்கு, ‘ஸ்டேஜ் 1’ மற்றும்  ‘ஸ்டேஜ் 2’ ஆகிய நிலைகளில் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ரூபாய் .5 லட்சம் வரை வழங்குகிறது. புற்றுநோய் மீண்டும் வரும் வாய்ப்புகள் உள்ளவர்களுக்கும், புற்றுநோய் பரவுதல் (மெட்டாஸ்டாசிஸ்) மூலம் பாதிப்புள்ளவர்களுக்கும், இரண்டாவது முறையாக புற்றுநோய் (second malignancy) தாக்குதலால்  பாதிக்கப்படுபவர்களுக்கும் இந்த உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் பலன்களை அளிக்கிறது. மேலும் இத்திட்டமானது, புற்றுநோய் அல்லாத இதர நோய்களின் சிகிச்சைகளுக்காக, மருத்துவமனைகளில் வழக்கமாக அனுமதிக்கப்படும்  மருத்துவச் செலவுகளையும் உள்ளடக்கியிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

இந்த புதிய உடல்நலக் காப்பீட்டுக் கொள்கையின் ஒரு தனித்துவமான அம்சம், எந்தவிதமான முன் மருத்துவ பரிசோதனைகளும் இல்லாமலேயே இக்காப்பீட்டை வாங்க முடியும். வாடிக்கையாளர்கள் தங்களது முந்தைய மருத்துவ ஆவணங்கள், சமீபத்திய சிகிச்சைகள் தொடர்பான விவரங்கள் ஆகியவற்றை தனது முன்மொழிவு படிவங்களுடன் சேர்ந்து சமர்ப்பிக்க முடியும்.

ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லய்ட் இன்சூரன்ஸ், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. வி. ஜெகன்நாதன் (V. Jagannathan, CMD, Star Health and Allied Insurance) இந்த புதிய காப்பீடுத்திட்டம் குறித்து கூறுகையில், “உடல்நலக் காப்பீட்டு பொதுவாக ஏற்கனவே பாதிப்பை உண்டாக்கும் நோய்கள் இருப்பது கண்டறியப்படாதவர்களுக்கே வழங்கப்படுகிறது. ஆனால் நாங்கள், ஸ்டார் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் மூலமாக வாழ்வை அச்சுறுத்தும் வகையிலான நோய்களுக்கான சிகிச்சைகளைப் பெற்றுவரும் மக்களுக்கும், தங்களது எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற நிலையில் இருப்பவர்களுக்கும் உதவும்வகையில் உடல்நலக் காப்பீட்டு தயாரிப்புகளை ப்ரத்யேகமாக உருவாக்கி வருகிறோம். இவர்களுக்குதான் எதிர்வரும் காலத்தில் மருத்துவமும், நிதி உதவியும் மிக அவசியமானவைகளாகவும், உண்மையான தேவைகளாகவும் இருந்து வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உடல்நலக் காப்பீடு என்பது மிகவும் அத்தியாவசியமான அடிப்படை தேவை என நாங்கள் நம்புகிறோம். அதனால் இதை மனதில் கொண்டு நாங்கள் மக்களுக்கு அதிகபட்சமான நலன்களை வழங்கும்வகையில் தொடர்ந்து பல தயாரிப்புகளை வழங்கி வருகிறோம்’’ என்றார்.

இதர பலன்களாக, நோய் இருப்பது பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டால், மொத்த தொகையில் இருந்து பாதி தொகையை மொத்தப்பணமாக வழங்குகிறது ‘ஸ்டார் கேன்சர் கேர் கோல்ட்’ திட்டம். மேலும் அறுவைச் சிகிச்சையுடன் கூடிய மருத்துவம், அறுவைச் சிகிச்சை இல்லாத மருத்துவம் புற்றுநோய் அல்லாத பிற நோய்கள், விபத்து பாதுகாப்பு உள்ளிட்ட இண்டர்வென்ஷனல் சிகிச்சைகளுக்கான பலன்களையும் இத்திட்டம் வழங்குவதால், வழக்கமான மருத்துவக்காப்பீட்டின் பலன்களையும் வழங்குகிறது.

ஸ்டார் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ்-ன் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு. எஸ். பிரகாஷ் கூறுகையில்“இந்தியாவில் புற்றுநோய் தொடர்பான முன்னேற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல் புற்று நோய்க்கான சிகிச்சைகளில், புதிய வசதிகளும் அதிகரித்து வருகின்றன. அதிகரித்துவரும் இந்த விழிப்புணர்வால், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடிகிறது. ஆனால் போதிய நிதிவசதி இல்லாததால், தனிப்பட்ட மக்களால் அவர்களுக்கு அவசியமான சிகிச்சைகளை சரியான காலத்தில் முழுமையாக மேற்கொள்ளமுடியாமல் போய்விடுகிறது. இதனால் நோயின் தாக்கம் மீண்டும் வருகிறது. ஸ்டார் கேன்சர் கேர் கோல்ட், புற்றுநோயினால பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிப்பதோடு, அவர்களுக்கு புற்றுநோய் அல்லாத பிற நோய்களுக்கான சிகிச்சைகளைப் பெற உதவும் உடல்நலக் காப்பீட்டையும் வழங்குகிறது. இந்த ப்ரத்யேகமாக வாய்ப்பு, அவர்களுக்கு ‘ஸ்டார் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ்’ போன்ற அக்கறைக் கொண்ட இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் மீது பெரும் நம்பிக்கையையும், திருப்தியையும் அளிக்கிறது” என்றார்.

“எங்களது மாபெரும் நெட்வொர்க் இந்தியா முழுவதிலும் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக செயல்பட்டு வருகிறது. அதனால், எங்களால் முடிந்தளவு அனைத்து புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களைச் சென்றடைய முடியுமென நம்புகிறோம். இதன் மூலம் புற்றுநோய் மற்றும் இதர நோய்களுக்கு எதிராக தேவையான நிதிப்பாதுகாப்பை வழங்கமுடியும்’’ என்கிறார் ஸ்டார் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி திரு, ஆனந்த் ராய் (Star Health Insurance Executive Director and Chief Marketing Officer Anand Roy)

2016ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட IRDAI வழிமுறைகளின்படி ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லய்ட் இன்ஸ்சூரன்ஸ்-ண் ‘ஸ்டார் கேன்சர் கேர் கோல்ட்’ திட்டத்தை முன்மாதிரி சோதனைத் திட்டமாக அறிமுகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.