100 கிலோவிலிருந்து 21 கிலோ எடை குறைத்த சிம்பு

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்காக உடல் எடையை 95 கிலோவுக்கு மேலாக ஏற்றினார் நடிகர் சிம்பு. செக்கச் சிவந்த வானம் & வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்பட சூட்டிங் தடைபட்டுள்ளது. கடுமையான உடற்பயிற்சி செய்து அதன் பலனாக 100 கிலோ உடல் எடையிலிருந்து தற்போது அவர் 21 கிலோ குறைந்து இருக்கிறாராம்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இதனை  தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சிம்புவின் ஸ்லிம் புகைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.