சீமான் என்னிடம் பேசினால், பிரச்னை சுமூகமாக முடியும் – விஜயலட்சுமி

இரண்டு தினங்களுக்கு முன் தற்கொலை முயற்சி செய்தார் நடிகை விஜயலட்சுமி.

தற்கொலைக்கு முன்னர் ஒரு வீடியோ பதிவில்… தன்னால் வாழ முடியவில்லை. என் சாவுக்கு காரணமான சீமான் மீதும், ஹரி நாடார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

பின்னர் தற்கொலை முயற்சியால் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எழும்பூர் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் விஜயலட்சுமி.

அவர் பேசுகையில்… “நடப்பது எதுவும் நாடகமில்லை. மலர் மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்றினார்கள். ஏன் என்று தெரியவில்லை.

நான் இன்னும் குணமாகவில்லை. மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறது.

தமிழக மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதால் தான் பேசுகிறேன். எனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது.

காயத்ரி ரகுராம் எனக்கு உதவினார். சீமான் நான் பாஜகவிடம் காசு வாங்குவதாக சொல்கிறார்.

ஹரி நாடார் சீமானுக்காக என் நாக்கை அறுத்துவிடுவேன் என்று சொல்கிறார்.

சீமானின் அக்கிரமங்கள் எல்லை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

சீமான் வாய்திறக்காமல் இருப்பதால் பிரச்னை முடிவுக்கு வராது; என்னிடம் பேசினால், பிரச்னை சுமூகமாக முடியும்” என விஜயலட்சுமி பேசினார்