சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான இலவச மின்னணு கீமோ படுக்கைகளை சிங்கப்பூர் அரிமா சங்கத்தினர் வழங்கினர்

சென்னை ஃபீனிக்ஸ் அரிமா சங்கம் மற்றும் சிங்கப்பூர் கார்டன் சிட்டி அரிமா சங்கம் ஆகியவை இணைந்து குழந்தைகளை புற்றுநோயிலிருந்து காப்பாற்றும் விதமாக இலவச மின்னணு கீமோ படுக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி  சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் டே கேர் செண்டரில்  நடைபெற்றது. 
அரிமா  மாவட்டம் 324 ஏ1 ஆளுநர் கே.ஜகந்நாதன்அவர்களின் சேவை முனைப்பு திட்டங்களில் ஒன்றான “ புற்றுநோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுதல் திட்டத்தின் கீழ் இம்மாவட்ட பீனிக்ஸ் அரிமா சங்கம்  சிங்கப்பூர்கார்டன் சிடி (மாவட்டம் 308 ஏ1) அரிமா சங்கதுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் சேவைதிட்டம் ஒன்றை சென்னை எக்மோரில் உள்ள குழந்தைகள் மருத்துவனையில் நடத்தியது.
 
இத்திட்டதின் படி அம்மருத்துவமனையில் இயங்கிவரும் ரத்தசம்பந்தபட்ட பிரிவு  கூடத்ததில் தினம் தினம் மருத்துவ உதவி பெரும்புற்று நோயால் பாதிக்கபட்ட குழந்தைகளுக்காக மின்சார சாய்வு நாற்காலிகள்வழங்கப்பட்டன. இவ்விழா மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் ஆர். நாராயண பாபு சென்னை மருத்துவ கல்லூரி தலைவர் டாக்டர் ஆர் ஜயந்த் மேலும் இம்மருத்துவமனை இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர் ரேமாசந்திரமோஹன் டாக்டர் சி. ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலையில் 10.12.2019 அன்று காலை நடந்தேறியது. 
 
அன்று மாலை சென்னை காந்தி நகரில்உள்ள மிக் கொன்னெல் பிரிவு அடையார் புற்று நோய் மருத்துவமனையில் மிக் கொன்னெல் பிரிவிர்க்கு பண உதவி வழங்கும்விழா மேதகு பத்மா விபூஷன் டாக்டர் வி.சாந்தா அரிமா மாவட்டம் 324 ஏ 1 ஆளுநர்  கேஜெகந்நாதன் சிங்கப்பூர் அரிமா மாவட்டம் 308 ஏ 1 ஆளுநர் கரேத் கோ பெம் இதுணை நிலை ஆளுநர்கள் பிரகாஷ் குமார், எஸ். வி.மாணிக்கம், உலகளாவிய மாவட்ட சேவை குழு தலைவர் அரிமா எஸ் போஸ் சென்னை பீனிக்ஸ் அரிமா சங்க தலைவர் குமாரராஜா, செயலாளர் அரிமா விஜயகுமார், பொருளாளர் உன்னி கிருஷ்ணன் சிங்கப்பூர் கார்டன் சிடி அரிமா சங்கத்தலைவர் வெண்டி லீவ்  மற்றும் மற்றும் சிங்கப்பூர் லயன்ஸ் கிளப்பின் 8ஆவது மண்டலத் தலைவர் லயன் கோ யூ செங், மாவட்டம் 324ஏ1 அமைச்சரவை செயலர் கே சந்திரசேகர்  மற்றும் பொருளாளர் சி. ஆர் . கிருஷ்ணன் முன்னிலையில் நடந்தேறியது. 
 
சமீப காலஅரிமா சங்கங்கள் வரலாற்றில் இது போன்ற வெளிநாட்டு அரிமா சங்கத்துடன்  ஒருங்கிணைந்து செய்யப்படும் சேவைத்திட்டம் இதுஒன்றே ஆகும் என்பது குறிப்பிடதக்கதும்,போற்றதக்கதும் ஆகும். இத்திட்டம் அரிமா எஸ்.போஸ் அவர்களின் சீரியமுயற்சியில்  அவரின் பீனிக்ஸ் அரிமாசங்கதினரின்  துணையுடன் நிறைவேறியது! 

மேலும் மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். முதன் முறையாக சிங்கப்பூரைச் சேர்ந்த சீனர்கள் அரசின் தலையீடு இல்லாமல் இவ்வாறான உதவிகளை செய்ய முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.