“ராட்சசி” விமர்சனம்

தலைமை ஆசிரியராக கிராமத்து அரசு பள்ளியில் ஜோதிகா பொறுப்பேற்கிறார். பள்ளி சரியாக செயல்படாமல் மோசமான நிலையில் இருக்கிறது. இதனை சரி செய்து பள்ளியின் தரத்தை உயர்த்தி தரமான கல்வியை தர வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோரை சரி  படுத்துகிறார். சுகாதாரமற்ற பள்ளியை சுகாதாரமாக மாற்றுகிறார். தனியார் பள்ளி உரிமையாளர் ஹரிஷ் பெராடி ஜோதிகாவிற்கு பிரச்சனைகளை கொடுக்கிறார். 
ஜோதிகா பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? பள்ளியின் தரத்தை மாற்றி வெற்றி பெற்றாரா? என்பதே ராட்சசி படத்தின் மீதிக்கதை.
 
சிறப்பான கதாபாத்திரத்தில் அழகாவும் சிறப்பாகவும் நடித்துள்ளார் ஜோதிகா. தலைமை ஆசிரியராக அரசு பள்ளியில் நடக்க கூடிய அவலங்களை எடுத்துக்காட்டி, தீர்வுகளையும் சொல்லியிருக்கிறார். 
தலைமை ஆசிரியர் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு நிறைவாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார் ஜோ. 
ஹரிஷ் பெராடி தன் பள்ளிதான் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்று பல வேலைகளை செய்தாலும் அதில் ஒரு நேர்மை இருக்கிறது.
பூர்ணிமா பாக்யராஜ், சத்யன்,  கவிதா பாரதி, ஜோதிகாவுடன் நெருக்கமாக பழகும் சிறுவன் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
ஆக மொத்தம் “ராட்சசி” அரசு பள்ளியின் அவலங்களை சரி செய்யும் தேவதை