காணும் பொங்கல் மெரினாவில் அலை மோதிய மக்கள்

காணும் பொங்கல் மெரினாவில் அலை மோதிய மக்கள்

 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் ‘களை’ கட்டியது. காணும் பொங்கல் தினமான இன்று பொதுமக்கள் சுற்றுலா தலங்களில் கூடி பொழுதை கழிப்பார்கள். சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் திரண்டனர்.மெரினா கடற்கரை முழுவதுமே மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது. பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவு பொருட்களை கடற்கரையில் அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டனர்.

சிறுவர்-சிறுமிகள் கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கடலில் குளிப்பதற்காக இறங்கி யாரேனும் உயிரிழந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அண்ணா சமாதியில் தொடங்கி பட்டினப்பாக்கம் வரையில் சவுக்கு கட்டைகள் கட்டப்பட்டிருந்தன. இதனை தாண்டி யாரும் உள்ளே சென்று விடக்கூடாது என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கடற்கரையில் சவுக்கு கட்டைகளுக்கு உள்புறமாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.அண்ணா சதுக்கம், மெரினா போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கூட்டத்தை கண்காணிப்பதற்காக 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் பைனாகுலர் மூலம் கண்காணித்து வாக்கி டாக்கி வழியாக உஷார் படுத்திக் கொண்டே இருந்தார். பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலமாக போலீசார் எச்சரித்துக் கொண்டே இருந்தனர்.உழைப்பாளர் சிலை அருகில் 2 இடங்களில் சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு சாமியானா பந்தலில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டிருந்தது.தில் இருந்தபடியே போலீஸ் அதிகாரிகள் உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டே இருந்தனர். கா ணாமல் போகும் குழந்தைகளை கண்டு பிடிக்க அவர்களின் கைகளில் வளையம் ஒன்று பொருத்தப்பட்டது. அதில் பெற்றோர்கள், போலீசாரின் செல்போன் எண்கள் எழுதப்பட்டன.மாயமான நிலையில் தனியாக தவித்த குழந்தைகள் இந்த போன் நம்பர் மூலமாக பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டனர். அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதநினைவிடங்களிலும் கூட்டம் அலை மோதியது. ஜெயலலிதா நினைவிடத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.கூட்டம் அதிகமாக காரணப்பட்டதால் மெரினாவில் உள்ள அனைத்து கடைகளிலும் வியாபாரமும் களை கட்டி காணப்பட்டது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன