வென்டிலேட்டரைப் பயன்படுத்தாமல், நோயை எதிர்த்து உயிர்வாழ தீரத்துடன் போராடிய நோயாளி

சென்னை, 25 செப்டம்பர் 2020: நோபல் மருத்துவமனை, நுரையீரலில் 100 சதவிகிதம் தொற்றினைக் கொண்டிருந்த ஒரு கோவிட் 19நோயாளிக்கு வெண்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் சிகிச்சையளித்து, வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், நெல்லூரைச் சேர்ந்த 54 வயதான திருமதி.ஹேமாவதி அவர்கள், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிரமான அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரம் ஏற்பட்ட நிலையில், பிற மருத்துவமனைகள் இயலாமையால் கைவிரித்த போதும் தனது நம்பிக்கையை கைவிடவில்லை. தனது உடல்நிலை 99% ஒத்துழைக்கக்கூடிய நிலையில் இல்லை மற்றும் உயிர்பிழைக்கும் வாய்ப்பும் பெரிதாக இல்லை என்று தெரிந்த போதிலும் அவர் தனது நம்பிக்கையை இழக்கவில்லை. சென்னை, புரசைவாக்கம், நோபல் மருத்துவமனையில் அவர் தானாக வந்து சேர்ந்து, அதிதீவிர நிலையில் சிகிச்சைப் பெற்று, இப்போது கோவிட்டிலிருந்து முற்றிலுமாக குணமாகியுள்ளார்.

வென்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் தன்னை குணப்படுத்திக் கொள்வதில், அவர் மிகவும் உறுதியாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
 
நோபல் மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை டாக்டர் பாலாஜி ரவில்லா பாஸ்கரன், MBBS, MSஅவர்கள், “கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் 2020 ஆகஸ்ட் 25 ஆம் தேதி கோவிட் அறிகுறிகள் இருந்தன, இருப்பினும் இருவரில், திருமதி.ஹேமாவதியின் வெள்ளை இரத்த அணுக்கள் எண்ணிக்கை, 1500 ஆக குறைய,நெல்லூரில் எடுக்கப்பட்ட CT ஸ்கேனில் கோவிட் அறிகுறிகள் உறுதி செய்யப்பட,5 நாட்களில் அவரது நிலைமை மிகவும் மோசமடைந்தது. அறிகுறிகள் தொடங்கிய 6 வது நாளில், அவர்கள் இருவரும் சென்னை புராசைவாக்கத்தில் உள்ள எங்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். செப்டம்பர் 2020 ஆரம்பத்தில் திருமதி.ஹேமாவதி ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும் மூச்சுத்திணறல் நிலையில் இருந்தார் மற்றும் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது சி.டி. ஸ்கேன் 19/20என நுரையீரல் ஈடுபாட்டைக் காட்டியது, இது கிட்டத்தட்ட 95% ஆகும் – இது ஒரு மோசமான முன்கணிப்பைக் குறித்தது. நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல், சீரம் ஃபெரிடின் 1000க்கு மேலும், c ரியாக்டிவ் புரதம்18 க்கு மேலும், இன்டர்லூகின் 6 (IL 6) அடுத்த 7 நாட்களில் படிப்படியாக 4 முதல் 202 வரையும் அதிகரித்தது &நியூடோபில் லிம்போசைட் விகிதம் (NLR) 2.35-லிருந்து 8.5ஆக அதிகரித்தது –இவை அனைத்தும் வரவிருக்கும் மோசமானவற்றின் அறிகுறிகளாகும்.
 
மாஸ்க் ஆக்ஸிஜனில் இருந்து வென்டூரி மாஸ்க் ஆக்ஸிஜனேற்றத்திற்கும், அதிலிருந்து உயர் ஓட்ட ஆக்ஸிஜன் மற்றும் இறுதியாக நான்-இன்வேசிவ் மாஸ்க் வென்டிலேஷனுக்கும் அவர் மாற்றப்பட்டார். இறுதியாக மீதமிருந்தது வென்டிலேட்டர் மட்டுமே. குடும்பத்திற்கு சில நிச்சயமான இறப்புக் காரணிகள் குறித்தும் மற்றும் தேவைப்படும் உயர் ஆதரவுகள் குறித்தும் விளக்கப்பட்டன. அதுவும் அவருக்கு பெரியளவில் உதவும் நிலையில் இல்லை என்பதே அப்போதைய நிலையாகும். ஏப்ரல் 2020 முதல் வெளிநோயாளிகளாக சுமார் 1500நபர்களுக்கு நாங்கள் சிகிச்சையளித்திருந்தோம். அதில் 1000 நோயாளிகள் வரை உள்நோயாளிகளாகவும் மற்றும் நோபல் ஹோம் கேர் சேவைகளின் வழியாகவும் சிகிச்சை பெற்றிருந்தனர். அந்த அனுபவத்தில், நாங்கள் அவரது உயிர்பிழைப்பு குறித்து பெரியளவில் நம்பிக்கையை தெரிவிக்கவில்லை.எங்கள் COVID அனுபவத்தின் ஒவ்வொரு அம்சமும், “இந்த நோயை வென்று அவர் உயிர்பிழைப்பு, சூரியன் மேற்கில் உதிப்பதற்குச் சமம்” என்றே கருதச்செய்தது.
 
இதற்கிடையில் அவரது கணவர், மனைவியை விட அதிக உடல் பருமன் மற்றும் ஒப்பீட்டளவில் குறைவான உடற்தகுதிகளைக் கொண்டிருந்தபோதிலும் விரைவாக குணமடைந்தார். திருமதி.ஹேமாவதி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்த நிலையில், தனது மூச்சை முற்றிலுமாக நிறுத்தக் கூடிய சூழலில் இருந்தார். அனுமதிக்கப்பட்ட 9 வது நாளில், நாங்கள் மீண்டும் CT மார்பு ஸ்கேனை மேற்கொண்ட போது, 20/20 ஈடுபாட்டைக் கண்டோம் – அதாவது “100% நுரையீரல் பாதிப்பு”. சிறந்த வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், நோயெதிர்ப்பு பூஸ்டர்கள், ஊட்டச்சத்து ஆதரவு மற்றும் மார்பு பிசியோதெரபி இருந்தபோதிலும் அவர் அந்த நிலையை அடைந்தார்.” என்று கூறினார்
 
நோபல் மருத்துவமனையின் மூத்த கோவிட் பராமரிப்பு பதிவாளர்டாக்டர் மனோதினி மற்றும் கோவிட் மருத்துவர் டாக்டர் அருண் ஆகியோர், “அவரது குடும்பத்தினர்,“என் அம்மா எப்படி இருக்கிறார்?”என்றுகேள்வி கேட்கும்போதெல்லாம்எங்கள் நிலையான பதில், “எந்த வீழ்ச்சியும் இல்லை என்றாலே, முன்னேற்றம் தான்” என்றே இருந்தது. அனுமதிக்கப்பட்ட 2 வார காலத்திற்குள், அதிசயமாக அவர் தொடர்ந்து சுயமாககவே சுவாசிக்கச் செய்தார்.வென்டிலேட்டர் தேவையில்லை என்று தீர்மானமாக இருந்தார். அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்கக்கூடிய அளவிற்கு பல நாட்கள் இருந்தன. ஆனால் அவர் ஒருபோதும் கவலையோ அல்லது பீதியோ அடையவில்லை. அவரது கணவரும் கஷ்டப்படுகிறார் என்று நாங்கள் அவளிடம் பொய் சொன்னபோது, மனைவி சரியாகிவிடுவார் என்று நான் அவருக்கு உறுதியளித்தால்தான் அவர் தொடர்ந்து நோயை எதிர்த்துப் போராடுவார் என்று அவரது கணவர் கூறியர், ஹோமவதி அவர்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தது. அது அவளரது மன உறுதியையும் அதிகரித்தது. பின்னர் எதிர்மறையான உணர்ச்சிகளால் தன்னைத் துன்புறுத்துவதை நிறுத்திவிட்டு, 24/7இயந்திரத்திற்கு இணையாக சுவாசித்து மீட்சியடைவதை நோக்கி அவர் கவனம் செலுத்தத்  துவங்கினார்.இதற்கிடையில், வாய்வழி உணவு உட்கொள்ளுதலுக்காக, ஆக்சிஸனை 5 நிமிடங்கள் இடைநிறுத்த வேண்டிய நிலையும் இருந்தது” என்று கூறினர்.
 
இன்று 25 செப்டம்பர் 2020 அன்று, அனுமதிக்கப்பட்டு24 நாட்களுக்குப் பிறகு, வைரஸ் அவரது உடலை விட்டு முற்றிலுமாக நீங்கிவிட்டது. ஆனால் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்ந்து நீடிக்கும் போதும், அவர் புன்னகையுடனும், உறுதியான மனதோடும் அதை எதிர்கொள்கிறார். அவரால் இப்போது ஆக்ஸிஜன் இல்லாமல் ஒரு நாளைக்கு மூன்று முறை 50 மீட்டர் வரை நடக்க முடிகிறது. அவர் ஒரு நாளைக்கு மூன்று முறைகள் தனது சுவாச பயிற்சிகளை மேற்கொள்கிறார் மற்றும் சாலடுகள், பழங்கள், கொட்டைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் போன்ற சமைக்காத உணவுகளைக் கொண்ட, ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுகிறார்.
 
அனுமானங்களில் கவனம் செலுத்தாமல் தன்மீது நம்பிக்கை வைத்து, தடைகளை உடைத்தெறிவதற்கான ஒரு சிறந்த உதாரணமாக நோயாளி ஹேமாவதி திகழ்கிறார். அவர் தனது பராமரிப்பாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகளுடன் முழுமையாக ஒத்துழைத்தார். கவலைப்பட தனது ஆற்றலை செலவழிக்காமலும், சூழ்நிலையை நினைத்து சோகத்தில் மூழ்காமலும், நம்பிக்கையோடு பிரச்சனைகளை எதிர்கொண்டார். அவரது உடலில் ஏற்பட்ட அழற்சி புயல் ஏன் அவரது நுரையீரலை சேதப்படுத்தவில்லை என்பது பற்றி எங்களிடம் எந்தவொரு அறிவியல் ரீதியிலான விளக்கமும் இல்லை. ஆனால், அந்தளவு பாதிப்பில் பாதியைக் கொண்டிருந்த நோயாளிகளும் எட்டிய நிலைக்கு அவர் செல்லவில்லை. விஞ்ஞானத்தின் மனநிலையைக் காட்டிலும், மனித உத்வேகத்தின் மனநிலை எப்போதும் மேம்பட்டது என்பதற்கு அவரே ஒரு மிகச்சிறந்த வாழும் எடுத்துக்காட்டு!
 
மருத்துவமனை பற்றி:
‘தரத்தில் சமரசம் எப்போதும் இல்லை’ என்பதே நோபல் கொள்கையாகும். எங்கள் நிபுணத்துவம் மற்றும் உபகரணங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதன் மூலம் சிறந்த நோயாளி சிகிச்சைகளை வழங்குவதை நாங்கள் சாத்தியமாக்குகிறோம். எங்கள் சமீபத்திய கார்ல் ஸ்டோர்ஸ் லேப்ராஸ்கோபி தொகுப்பு, கட்டிங் எட்ஜ் c ஆர்ம், ஒலிம்பஸ் எண்டோ &கொலோனோஸ்கோபி சூட், மல்டிஃபங்க்ஸ்னல் ரிமோட் ஆப்பரேட் ot டேபிள்கள், மிகவும் நிழல் குறைவான LED OT விளக்குகள், கார்ல் ஜெய்ஸ் கண் மற்றும் ENT அறுவை சிகிச்சை நுண்ணோக்கி, மேக்வெட் பல்நோக்கு வென்டிலேட்டர்கள், அறுவை சிகிச்சை அரங்குகளில் லேமினார் காற்றோட்டம் (தொற்றில்லா அறுவை சிகிச்சைகளுக்கு) மற்றும் எங்கள் பல பிற கேஜெட்டுகள் நோயிலிருந்து ஆரோக்கியத்திற்கு சீராக மாறுவதற்கு உதவுகின்றன. அசுத்தத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை. 24 மணிநேர மிக்சக்தி மற்றும் சுத்தமான நீர் பேக்கப், மையப்படுத்தப்பட்ட ஆக்ஸிஜன், அழுத்தமேற்றப்பட்ட காற்று மற்றும் நைட்ரஸ் ஓட்டம் உடன் 24 X 7 மருந்தகம், முழு செயல்பாட்டுத் திறன்கள் கொண்ட ஆய்வகம் மற்றும் ஒவ்வொருவரது நாமொட்டுகளையும் மகிழ்விக்கும் உணவு வசதிகள் ஆகியவை, எங்களது சிறப்பம்சங்களாகும்.